தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி தி.மலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கணித பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி வருட பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தில் திருக்கணித பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கமான நடைமுறையாக உள்ளது.
இந்நிலையில், தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங் காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருக்கணித பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு இரண்டாம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பாக நடைபெற்றது. அப்போது, திருக்கணித பஞ்சாங்கத்தை விநா யகர் சிலை முன்பாக வைத்து வழிபாடு நடத்தப்பட்டு பிலவ வருடத்துக்கான பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. பின்னர், பஞ் சாங்க புத்தகம் அங்கிருந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் கோயில் ஊழியர்களுக்கு வழங் கப்பட்டன.
தமிழ் புத்தாண்டு தினத்தை யொட்டி நேற்று அண்ணாமலை யார் கோயிலில் பக்தர்கள் காத்தி ருந்து தரிசனம் செய்தனர். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் கோயில் மூடப்பட்டிருந்த நிலையில் இந்தாண்டு கோயில் நடை திறக்கப்பட்டிருந்தது. கட்டுப்பாடுகளுடன் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கொடுத்திருந்தாலும் நேற்று பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. வியாபாரிகள் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி தங்களின் தொழில் கணக்கு புத்தகங்களை அண்ணாமலையார் சன்னதி முன்பாக வைத்து வழிபாடு செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago