திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி செலுத்துவது அதிகரிக்கப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சிகளை தொடர்ந்து ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 3 கிராம ஊராட்சிகளை ஒன்றி ணைத்து அங்கு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாமை நடத்த வேண்டும் என சுகாதாரத்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில், திருப் பத்தூர் அடுத்த கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதியூர் ஊராட்சி மற்றும் எஸ். பள்ளிப்பட்டு ஊராட்சி என 2 கிராம ஊராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு ஆதியூர் ஊராட்சியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் கரோனா தடுப்பூசி போடும் முகாம் நேற்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்து தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இதில், 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புல்லானேரி, ஒட்டப்பட்டி, வேட்டப் பட்டு மற்றும் திரியாலம் ஆகிய 4 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புல்லானேரி ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடத்தப் பட்டது.
இந்த முகாமையும் ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர் புறங்களை தொடர்ந்து கிராமப்பகுதிகளிலும் கரோனா பரவல் காணப்படுகிறது. இதைத்தடுக்க அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். பல்வேறு தேவைகளுக்காக நகர் புறங்களை தேடி வரும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வெளியே சென்று வீடு திரும்பிய வுடன் கை, கால்களை சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும்.
மேலும், கரோனா தடுப்பூசி போடும் முகாம் கிராமப்பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. 3 அல்லது 4 ஊராட்சிகளை ஒன்றிணைந்து ஏதேனும் ஒரு ஊராட்சியில் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. இது தொடர் பாக அறிவிப்புகள் ஊராட்சி நிர்வாகம் மூலம் கிராம மக்களுக்கு தெரிவிக்கப்படும். எனவே, அதை பின்பற்றி 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்.
தடுப்பூசி என்றால் பயமோ, நடுக்கமோ தேவையில்லை. எந்த பக்கவிளைவுகளும் இந்த தடுப்பூசியில் இல்லை என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி அங்கன் வாடி பணியாளர்கள், சுகாதாரத் துறையினர் வீடு, வீடாக வந்து கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விவரங்களை சேகரிக்கவுள்ளனர். அவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்களை கரோனா தொற்றில் இருந்து பாது காக்க அரசு இலவசமாக கரோனா தடுப்பூசியை வழங்கி வருகிறது. இதை மக்கள் பயன்படுத்தி பெருந்தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
பேருந்து வசதிகள்...
கரோனா தடுப்பூசி போடும் முகாம் ஏதாவது ஒரு ஊராட்சியில் நடைபெறும் என்பதால் வெகு தொலைவில் உள்ள கிராம மக்களை முகாம் நடைபெறும் இடத்துக்கு அழைத்து வர பேருந்து வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.இந்நிகழ்ச்சியில், கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சுமதி, வட்டார மருத்துவ அலுவலர் தீபா, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago