தென்காசி மாவட்டம், இலஞ்சி பாரத் கல்விக்குழுமத்தில் இணையவழியில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப் பட்டது. கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்கு நர் ராதாபிரியா, ஆலோசகர் உஷா ரமேஷ், பாரத் வித்யாமந்திர் பள்ளி முதல்வர் வனிதா ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ் ஆர்வலர் கணேஷ் லட்சுமிநாராயணன் பேசினார். மாணவி நக்சத்ரா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவர் அன்புச்செல்வன் வரவேற்றார். மாணவ, மாணவிகள் பரதநாட்டியம், நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago