திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒவ் வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 3 கிராம ஊராட்சிகளை ஒன்றிணைத்து அங்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமை நடத்த வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார்.
திருப்பத்தூரில் 45 வயதுக்கு மேற்பட்ட வியாபாரிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று தொடங்கி வைத்தார். திருப்பத்தூர் நகரில் செயல்படும் காய்கறி சந்தைகளில் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் 45 வயதுக்கு மேற்பட்ட 200 வியா பாரிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் திருப்பத்தூர் ஏஜிஎஸ் மஹாலில் நேற்று நடை பெற்றது.
மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை தாங்கி தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி வைத்தார். இதில், சிறு வணிகர்கள், காய்கறி வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணி மனையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணி யாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து, ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட அசோக்நகரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார். அப்போது, மாவட்டம் முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும், தினசரி 5 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் பட்டியலை தயார் செய்து 2-ம் கட்ட தடுப்பூசி செலுத்துவது குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல, வீடு, வீடாக சென்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 3 கிராம ஊராட்சிகளை ஒன்றி ணைந்து அங்கு தடுப்பூசி போடும் முகாமை நடத்த வேண்டும் என சுகா தாரத்துறையினருக்கு ஆட்சியர் சிவன் அருள் உத்தர விட்டார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில், திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் சத்திய நாதன், துப்புரவு ஆய்வாளர் விவேக், வட்டார மருத்துவ அலுவலர் (பொறுப்பு) மீனாட்சி, ஜோலார் பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார், வணிக சங்க நிர்வாகிகள் தேவராஜ், செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago