கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே உள்ள கீழப்பருத்திக்குடி - குமராட்சி கிராமப்புற இணைப்பு சாலை உள்ளது. இந்தச் சாலையை அப்பகுதியில் உள்ள 10 கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஊரக கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்தச் சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் சுமார் 2 கி.மீ உள்ள இந்தச் சாலை சுமார் 600 மீட்டர் தொலைவு மட்டுமே தார்சாலையாக மாற்றப்பட்டது. மீதி உள்ள சாலையில் கருங்கல் ஜல்லி போடப்பட்டு, செம்மண் மட்டும் கொட்டி சாலை போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சிரமத்துடன் சென்று வருகின்றன. இந்த செம்மண் சாலையில் கருங்கல் ஜல்லிகள் சிதறி கிடப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த வழியாக செல்லும் மினி பேருந்தும் தட்டு, தடுமாறி செல்கிறது. மழை பெய்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.
தேர்தல் முடிந்த பிறகு இந்தப் பணிகள் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது. இன்னும் சாலைப் பணி தொடங்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தச் சாலையை முழுமையாக சீரமைத்து, தார்சாலையாக மாற்றிட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago