கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், குலசேகரம், ஆரல்வாய்மொழி, களியக்காவிளை என பல பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது.
கோழிப்போர்விளையில் 52 மி.மீ, குழித்துறையில் 42 மிமீ.,பெருஞ்சாணியில் 13, புத்தன்அணையில் 11, பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, அடையாமடை, களியலில் தலா 10,பெருஞ்சாணியில் 13, குருந்தன்கோட்டில் 21, முள்ளங்கினாவிளையில் 18, முக்கடல் அணையில் 16 மிமீ மழை பதிவாகியிருந்தது. பேச்சிப்பாறை அணையில்39 அடியும், பெருஞ்சாணி அணையில் 52, பொய்கையில் 18, மாம்பழத்துறையாறில் 14, முக்கடல் அணையில் 4.9 அடியும் தண்ணீர் உள்ளது.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 7 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதுபோல் மணிமுத்தாறு அணைப்பகுதியில் 3.2 மி.மீ. மழை பெய்திருந்தது.143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 105.45 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 15 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து 104.75 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 93.40 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 8 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 200 கனஅடி தண்ணீர் திறந்துவிடப் பட்டிருந்தது.
மற்ற அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்ச நீர்மட்டம்): சேர்வலாறு- 118.40 அடி (156 அடி), வடக்கு பச்சையாறு- 43.53 அடி (50அடி), நம்பியாறு- 12.79 அடி (22.96 அடி), கொடுமுடியாறு- 6.75 அடி (52.50 அடி).
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago