நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி - தி.மலையில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

நெல் மூட்டைகள் வரத்து அதிகரித் துள்ளதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங் களை திறக்க வேண்டும் என வலியுறுத்தி உழவர் பேரவை சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் புருஷோத் தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறும்போது, “தேசிய மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் தொழிலாளர்களை குழுக்களாக பிரிக்காமல், ஒரு கிராமத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே நேரத்தில் பணி வழங்க வேண்டும்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்ற நாளில் நூறு நாள் திட்ட தொழிலாளர்களுக்கு ரூ.273 கூலி வழங்க வேண்டும். மேலும், களத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி வழங்க வேண்டும்.தி.மலை மாவட்டத்தில் நெல் உற்பத்தி அதிகளவில் உள்ளதால், வரத்து அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக செய்யாறு மற்றும் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளை பாதுகாக்க அதிக ளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதையடுத்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தண்டோரா போட்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்டச் செயலாளர் சிவா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்