ஆரணி அருகே அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இளைஞரின் தாயாரிடம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் முதற்கட்ட நிவாரண நிதியாக ரூ.4,12,500-க்கான காசோலையை கோட்டாட்சியர் பூங்கொடி நேற்று வழங்கினார்.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் வசிப்பவர் மோகன். டிராக்டர் ஓட்டுநர். இவர், திருவண் ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆரணி அடுத்த புனலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் உட்பட 3 பேர், மோகனிடம் இருந்து ரூ.12 ஆயிரம் மற்றும் இரு சக்கர வாகனத்தை கடந்த 8-ம் தேதி பறித்துச் சென்றனர்.
இது குறித்து ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் மோகன் புகார் செய்தார். அதன்பேரில்,சக்திவேல் உட்பட 3 பேர் மீது ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், இரு சக்கர வாகனத்தில் தப்பித்து சென்றபோது, விபத்தில் சிக்கியதாகக் கூறி, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட சக்திவேல் கடந்த 10-ம் தேதி இரவு உயிரிழந்தார்.
இந்நிலையில், சக்திவேலை 3 பேர் அடித்துக் கொலை செய்துள்ளனர் எனக்கூறி, ஆரணி நகர காவல் நிலையத்தை சக்தி வேலுவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள், நாங்கள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என காவல்துறை ஆய்வாளர் மீது குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக விசாரணை நடத்த வந்த கூடுதல் எஸ்பி அசோக் குமாரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து சக்திவேல் தாயார் அலமேலு கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து புனலப்பாடி கிராமத்தில் வசிக்கும் கிருஷ்ணன், பரசுராமன் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் முதற்கட்ட நிவாரண நிதியாக ரூ.4,12,500-க்கான காசோலையை சக்திவேலுவின் தாயார் அல மேலுவிடம் கோட் டாட்சியர் பூங்கொடி நேற்று வழங் கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago