கரோனா தொற்றுப் பரவலை தடுக்க - அம்மா உணவகங்களில் பார்சலில் உணவு வழங்க நடவடிக்கை :

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவலை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் பார்சலில் மட்டுமே உணவு வழங்க வேண்டும், என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்காக புதியகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள் ளன. இதன் ஒரு பகுதியாக அம்மா உணவகங்களில் பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஈரோடு மாநகரை பொறுத்த வரை 13 இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை, மதியம் என இரண்டு வேளைகளில் குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அம்மா உணவகங்களில் உணவு சாப்பிட்டுச் செல்கின்றனர்.

தற்போது மாவட்டத்தில் மீண்டும் கரோனா தாக்குதல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க அம்மா உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அம்மா உணவ கங்களில் அமர்ந்து சாப்பிடஅனுமதி இல்லை. அதேவேளை யில் எக்காரணம் கொண்டும் அம்மா உணவகங்கள் மூடப்படாது என ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்