ஈரோட்டில் மீன் மார்க்கெட்டுக்கு தடை - இறைச்சி கடைகளில் அதிகாரிகள் கண்காணிப்பு :

By செய்திப்பிரிவு

ஈரோட்டில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி நேற்று அனைத்து மீன் மார்க் கெட்டுகளும் மூடப்பட்டிருந்தன.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 85 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மீன்மார்க்கெட், மீன் இறைச்சி கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றும், இதர இறைச்சிக் கடைகள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் அறிவித்தார்.

இதன்படி ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட், காவேரி சாலை மீன் மார்க்கெட், நகர் பகுதியில் இயங்கும் இதர மீன் கடைகள் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மீன் கடைகள் மூடப்பட்டிருந்தன.

அதேவேளையில் கோழி, ஆடு இறைச்சி கடைகளில் நேற்று அதிகாலை முதல் பார்சல் மூலம் விற்பனை நடைபெற்றது. இந்த கடைகளில் விற்பனையாளர்கள் முகக் கவசம், கையுறை அணிந்து விற்பனை செய்கிறார்களா, வாடிக்கையாளர்கள் சமூக விலகலையும், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுகிறார்களா என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்