கோடை மழையை பயன்படுத்தி - நிலத்தை உழவு செய்வதால் ஏற்படும் நன்மைகள் : புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் விளக்கம்

விவசாயிகள் கோடை மழையைப் பயன்படுத்தி நிலத்தை உழவு செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராம.சிவக்குமார் விளக்கம் அளித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் பங்குனி- சித்திரை மாதங்களில் பெறப்படும் கோடை மழையைப் பயன்படுத்தி கோடை உழவு மேற்கொள்வது மிக அவசியம். ஏனெனில், நமது பூமி வெப்ப மண்டலமாக இருப்பதால் கோடையில் மேல் மண் அதிக வெப்பமடைகிறது. இந்த வெப்பம் கீழ்ப்பகுதிக்குச் செல்லும்போது நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறி விடும். மேல் மண்ணை உழவு செய்து ஒரு புழுதிப் படலம் அமைத்துவிட்டால், விண்வெளிக் கும் வேர்சூழ் மண்டலத்துக்கும் தொடர்பு அறுந்துவிடும். இதனால், நிலத்தில் உள்ள ஈரத்தை ஆவியாக விடாமல், இப்புழுதிப் படலம் தடுத்துவிடும்.

மேலும், கோடை உழவின்போது மேல் மண் துகள்களாகின்றன. இதனால் வெப்பத்தை உறிஞ்சும் மண், பின்னர் விரைவில் குளிர்ந்துவிடும். எனவே, நிலத்தில் நீர் இறங்கும் திறன் அதிகரிக்கும். மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைப்பதால், மண்ணில் நுண்ணு யிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகும்.

வயலிலுள்ள கோரை போன்றவற்றை கோடை உழவு செய்வதால் மண்ணின் மேற்பரப்புக்குக் கொண்டுவரப்பட்டு, சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது. கோடை உழவு செய்வ தால் நிலத்தின் அடியிலுள்ள கூண்டுப்புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் வெளியில் கொண்டுவரப்பட்டு அழிக்கப் படுகின்றன. மிக முக்கியமாக மக்காச்சோளத்தைத் தாக்கும் அமெரிக்க படைப் புழுக்களை கட்டுப்படுத்த கோடை உழவு மிகவும் சிறந்தது.

கோடை உழவு செய்யாத நிலத்தில் நீர் வேகமாக வழிந்தோடி, மண் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வயல்வெளிகளில் பெய்யும் மழைநீரை சேமிப்பதில் கோடை உழவு முக்கிய பங்கு வகிக்கிறது. கோடை உழவால் பல நன்மைகள் ஏற்படுவதால், ‘கோடை உழவு கோடி நன்மை” எனக் கூறப்படுகிறது. எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கோடையில் பெறப்படும் மழை யைப் பயன்படுத்தி, கோடை உழவு செய்து, தங்களின் நிலங்களில் மழைநீரை சேமிப்பதுடன், பூச்சி- நோயைக் கட்டுப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்