வேலூர் மாவட்டத்தில் வேகமெடுக்கும் கரோனா - ஒரே நாளில் 94 பேருக்கு பெருந்தொற்று உறுதி : மூடப்பட்டிருந்த சிறப்பு சிகிச்சை மையங்கள் திறப்பு

By செய்திப்பிரிவு

வேலூரில் நேற்று ஒரே நாளில் 94 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மூடப்பட்டிருந்த கரோனா சிறப்பு மையம் மீண்டும் திறக்கப்பட்டது. வேலூரில் சுமார் 2 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள் ளூர் மாவட்டங்களை தொடர்ந்து, வேலூர் மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நேற்று முன்தினம் வரை 22,107 பேர் கரோனாவால் பாதிக்கப் பட்டிருந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டிருந்தவர்களில் 21,252 பேர் முழுமையாக குண மடைந்து வீடு திரும்பினர். வேலூர் மாவட்டத்தில் இதுவரை 356 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் 499 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூரில் நேற்று ஒரே நாளில் 94 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த வெளி மாநிலத்தவர்கள் 15 பேர் கரோனாவால் பாதிக்கப்பட் டுள்ளனர். வேலூர் காந்தி ரோட்டில் உள்ள தங்கும் விடுதிகளில் உள்ள வெளிமாநிலத்தவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் வெளியாகும் போது கரோனா பாதிப்பு வேலூரில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலூர் மாநகர பகுதியில் மட்டும் 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவி னர்களுக்கு உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத் துறையினர், வருவாய்த் துறையினர் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு வார்டுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனை, வேலூர் அரசு பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, வேலூர் சிஎம்சி மருத்துவமனை, நறுவி மருத்துவமனை, அரியூர்  நாராயணி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டைப்போலவே கரோனா பரவல் படிப்படியாக அதி கரித்து வருவதால், கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, வேலூர் விஜடி பல்கலைக்கழகம் மற்றும் குடியாத்தம் அபிராமி கல்லூரி ஆகிய இடங்களில் கடந்த ஆண்டைப்போலவே கரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப் பட்டுள்ளன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா பரவல் குறைந்ததால் கரோனா சிறப்பு மையங்கள் மூடப்பட்டன. தற்போது, கரோனா 2-வது அலை வேகமெடுத்து தொற்று அதிகரித்துள்ளதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே, மூடப்பட்ட சிறப்பு சிகிச்சை மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு வார்டுகள் மீண்டும் திறப்பு

வேலூர் விஐடி பல்கலைக்கழகம் மற்றும் அபிராமி கல்லூரியில் 800 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அங்கு இன்று (ஏப்ரல் 12) முதல் முன்னேற்பாடு பணிகள் தொடங்க உள்ளன. மேலும், வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி, குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் ஓட்டு எண்ணும் மையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு இந்த 2 இடங்களிலும் ஏற்கெனவே இருந்ததை போல கரோனா சிறப்பு சிகிச்சை மையம் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி தேர்தல் பிரச்சாரத்தின் போதும், வாக்குப்பதிவின் போதும்கரோனா வேகமாக பரவி இருக்கவாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை யினர் தெரிவித் துள்ளனர்.

எனவே, தேர்தல் பிரச்சாரம், வாக்குப்பதிவு உள்ளிட்ட காரணங்களாக கடந்த வாரங் களில் வெளியே சுற்றித்திரிந்த பொதுமக்கள் யாருக்காவது, தொடர் காய்ச்சல், இருமல், சளி தொந்தரவு, இருமலுடன் காய்ச்சல், உடல் சோர்வு, மூச்சுத் திணறல், பசியின்மை, சுவை அறியாமை போன்ற அறிகுறிகள் தென்பட்டால்உடனடியாக அரசு மருத்துவ மனைக்கு வந்து கரோனா பரிசோ தனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பெரும் பாதிப்பை நம்மால் நிச்சயம் தடுக்க முடியும்.

அதேநேரத்தில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்.

தடுப்பூசி போட்டவர்களும் பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். கரோனா வேகமாக பரவுவதை தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத் துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்