வந்தவாசியில் - கட்டுரை நூல் வெளியீட்டு விழா :

By செய்திப்பிரிவு

உலக புத்தக தினத்தையொட்டி வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கவிஞர் முருகேஷ் எழுதிய ‘தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு’ எனும் கட்டுரை நூல் வெளியீட்டு விழா வந்தவாசியில் நேற்று நடைபெற்றது.

வந்தை கோட்டை தமிழ் சங்கத் தலைவர் ரகமத்துல்லா தலைமை வகித்தார். சங்க செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். உலக புத்தக தினவிழா சிறப்புக் கவிதைகளை, கவிஞர்கள் பரிதாபானு, ரஷீனா, தமிழ்ராசா ஆகியோர் வாசித்தனர்.

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு’ எனும் கட்டுரை நூலை கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மருத்துவர் வெங்கடேசன் வெளியிட, பெட்ரோல் நிலைய உரிமையாளர் சிவக்குமார், ரோட்டரி சங்க பயிற்சியாளர் ரமேஷ், சுரேஷ்முருகன், நல்நூலகர் சண்முகம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பாதிரி ஊராட்சி மன்றத் தலைவர் அரிகிருஷ்ணன், ஆர்.சி.எம். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன், பார்த்திபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் உலக புத்தக தினத்தையொட்டி புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

கட்டுரை நூலின் ஆசிரியர் முருகேஷ், நூலைத் தொகுத்த முனைவர் சேகர் ஆகியோர் ஏற்புரையாற்றினர். சங்க துணைச் செயலாளர் சதானந்தன் தொகுத்து வழங்கினார். முடிவில், தமிழ் சங்கப் பொருளாளர் தேவா நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்