கோபி நகராட்சியில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 12 கடைகளுக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் கடைகளுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோபி நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட், பேருந்து நிலையம், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாத 12 கடைகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார். இதுபோல் முகக்கவசம் அணியாத 70 நபர்களுக்கு தலா ரூ. 200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago