தென்காசி மாவட்டம், மேலகரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குற்றாலம் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள குஷன் நாற்காலிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது. மருத்துவர் சரவணனிடம் ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் ராஜகோபால் நாற்காலிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஸ்டாலின் ஜவகர், முருகன், மருத்துவர் ஐஸ்வர்யா, முன்னாள் துணை ஆளுநர் அழகராஜா, முன்னாள் தலைவர் கல்யாணகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago