திருநெல்வேலி மாவட்டத்தில் 107 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மட்டும் 48 பேருக்கும், புறநகர் பகுதிகளில் 59 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 3 இலக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. நேற்று புதிதாக 107 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வட்டாரம் வாரியாக பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை விவரம்: திருநெல்வேலி மாநகராட்சி- 48, அம்பாசமுத்திரம், மானூர், ராதாபுரம், களக்காடு- தலா 5, நாங்குநேரி, பாப்பாக்குடி- தலா 6, பாளையங்கோட்டை- 7, வள்ளியூர்- 12, சேரன்மகாதேவி- 8.
தற்போது இம்மாவட்டத்தில் 721 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனிடையே திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் கரோனா தடுப்பு கட்டுப்பாட்டு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்துக்கு 0462-2501012 அல்லது கட்டணமில்லா தொலை பேசி எண் 1077, தொலைபேசி எண் 0462-2501070 ஆகியவற்றிலும், 6374013254, 9499933893 ஆகிய எண்களுக்கு எஸ்எம்எஸ் வழியாக வும், வாட்ஸ்அப் மூலமும் தகவல் அளிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
திருநெல்வேலி ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்களும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரும், வணிகர்களும், பணியிடங்களிலும், பொது இடங்களுக்கு செல்லும்போதும் தவறாமல் முகக்கவசம் அணிந் திருக்க வேண்டும். தவறினால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். அரசு விதித்துள்ள நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாமல் இருப்போர் மீதும் அபராதம் உள்ளிட்ட தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்.
கரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் காலதாமதம் செய்யா மல் மாவட்டத்தில் உள்ள 43 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 9 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் செயல்படும் ஆர்த்தி ஆய்வகம், லிபர்டி ஆய்வகம், ஷிபா ஆய்வகம் மற்றும் பாரத் ஸ்கேன்ஸ் ஆய்வகம் ஆகியவற்றிலும் கரோனா பரி சோதனை செய்து கொள்ளலாம்.
கரோனா தொற்றை கண்டறியும் பொருட்டு மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரிசோதனை மருத்துவ முகாம்கள் அதிகளவில் நடத்தப் பட்டு வருகிறது. தனியார் பரிசோதனை நிலையங்களில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள அரசால் ரூ.2,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவுபெறாத நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற் கொள்ள ரூ.3 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. வீட்டுக்குவந்து பரிசோதனை மாதிரி எடுக்கும்போது கூடுதலாக ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை ரூ.30 லட்சம் அபராதம் வசூல்
தென்காசி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தவர்களிடம் இருந்து இதுவரை ரூ.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து பொது சுகாதாரத் துறை, காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறையினர் அபராதம் வசூலித்து வருகின்றனர்.
பொது சுகாதாரத் துறையினர் மூலம் இதுவரை 9,500 பேரிடம் இருந்து 9 லட்சத்து 69 ஆயிரத்து 900 ரூபாய், காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை மூலம் 9,975 பேரிடம் இருந்து 15 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய், வருவாய்த் துறையினர் மூலம் 76 பேரிடம் இருந்து ரூ.17 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுபோல், 2,111 பேரிடம் இருந்து ரூ.4 லட்சத்து 54 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை வசூலிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை ரூ.30 லட்சத்து 3 ஆயிரத்து 60 கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக் கவசம் அணியாதவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago