திருநெல்வேலி மாநகராட்சியிலுள்ள வணிக நிறுவனங்கள் கரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
மாநகராட்சி அலுவலகத்தில் வணிக நிறுவனங்களின் பிரதிநிதி களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். மாநகர் நல அலுவலர் டாக்டர் மா. சரோஜா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் கூறியதாவது:
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வணிகப்பகுதிகளில் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். காய்ச்சல், சளி, இருமல், தும்மல் உள்ளவர்கள் கடை களுக்கோ, வணிக வீதிகளுக்கோ செல்லக்கூடாது. மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள், தனியார் நிறுவனங்கள் போன்ற மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் அந்நிறுவனத்தின் முன்புறம் சோப்பு அல்லது சோப்புநீர் கொண்டு (சானிடைசர் இருப்பினும்) கைகளை கழுவும் வசதி கட்டாயமாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
வயோதிகர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், கடைவீதிகளுக்கு செல்வது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். பேருந்துகள், கார்கள், ஆட்டோக்களில் பயணம் செய்யும் போது சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதலை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.
வணிக நிறுவனங்கள் வாடிக்கை யாளர்களுக்கு கை கழுவும் வசதி, கை சுத்தம் செய்யும் திரவ வசதி, உடல் வெப்பப் பரிசோதனை வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். அவற்றை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். கடையில் பணிபுரியும் பணியாளர்கள், முகக்கவசம் அணிந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றுவதுடன் கூட்ட நெரிசலைத் தவிர்க்க வேண்டும். கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் அபராதம் வசூல் செய்யப்படும்.
வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநக ராட்சியின் சுகாதார ஆய்வாளர்களை உள்ளடக்கிய 9 சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில் உணவக உரிமை யாளர்கள் சங்கம், திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கம், வணிகர்கள் நலச் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
வாடிக்கையாளர்களுக்கு கை கழுவும் வசதி, கை சுத்தம் செய்யும் திரவ வசதி, உடல் வெப்பப் பரிசோதனை வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago