தி.மலை மாவட்டம் போளூரை அடுத்த ராந்தம் கிராமத்தில் வசிப்பவர் குமார். அரசுப் பேருந்து ஓட்டுநர். இவர், கடந்த 7-ம் தேதி சென்னையில் இருந்து போளூருக்கு பேருந்தை ஓட்டி வந்தார். போளூர் புறவழிச் சாலையில் வந்த போது, அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தியுள்ளார்.
அப்போது அங்கிருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் ஏறினர். இதையறிந்த ஓட்டுநர், பணிமனைக்கு அரசுப் பேருந்து செல்ல இருப்பதால், பேருந்தில் ஏறியவர்கள் கீழே இறங்குமாறு தெரிவித்துள்ளார். இதனால் இரண்டு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில், அரசுப் பேருந்தின் கண்ணாடி மீது கற்களை வீசியும், ஓட்டுநரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போளூர் காவல்துறையினர் ஓட்டுநர் குமார் புகார் செய்தார். அதன்பேரில், போளூர் பொன்னுசாமி தெருவைச் சேர்ந்த போஸ் உட்பட 15 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago