திருவிழாக்களில் கட்டுப்பாடுகளுடன் - கலை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும் : ஆட்சியரிடம் நாட்டுப்புற கலைஞர்கள் மனு

By செய்திப்பிரிவு

திரையரங்குகளுக்கு கட்டுப் பாடுகளுடன் அனுமதி அளித் தது போன்று திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி யளிக்க வேண்டும் என நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள் ளனர்.

தமிழகத்தில் கரோனா இரண் டாவது அலை தொடங்கியுள் ளதால் அரசு பல கட்டுப்பாடு களை விதித்துள்ளது.

திருவிழாக்கள் நடத்த தடை விதித்துள்ளது. இது திருவிழாக் காலம் என்பதால் கிராமங்களில் அதிகளவில் திருவிழாக்கள் நடை பெறும். திருவிழாக்களுக்கு தடை விதிப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் தெரிவித்தனர்.

அரசின் கட்டுப்பாடுகளால் திண்டுக்கல் மாவட்டத்தில் தப் பாட்டம், தெருக்கூத்து, கரகம், காவடி, நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தொழிலில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் அனுமதி வழங்கியது போல் திருவிழாக் களுக்கும் கட்டுப்பாடுகளுடன் குறைந்த எண்ணிக்கையில் கலை ஞர்களைக் கொண்டு கலைநி கழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என திண்டுக்கல் ஆட் சியர் மு.விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர்.

தங்களுக்கு தளர்வு அறிவிக் காவிட்டால் கரோனா நிவாரணமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். கடந்த ஊரடங்கு காலத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் வழங்கப்பட்ட ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி பாதிக் கும் மேற்பட்டோருக்குக் கிடைக் கவில்லை. இவை முறையாகச் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்க மாநில இணைப் பொதுச் செயலாளர் சந்தோஷ் தலை மையில் 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மனு அளிக்க வந்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்