குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோயில் சித்திரை விஷு திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், குற்றாலத் தில் உள்ள குற்றாலநாதர் சமேத குழல்வாய்மொழியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை விஷு திருவிழா, ஐப்பசி திருக்கல்யாணம், திருவாதிரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றவை. நடப்பாண்டு சித்திரை விஷு திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், இலஞ்சி குமாரர், சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெற்று வருகிறது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. விநாயகர், முருகர், குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்மன் உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் 4 தேர்களில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நாளை (11-ம் தேதி) காலை 8.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. வரும் 12-ம் தேதி சித்திரசபையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை சார்த்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. வரும் 14-ம் தேதி சித்திரை விஷு தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago