சந்தவாசல் அருகே - செம்மர கட்டைகள் கடத்திய 4 பேர் கைது :

By செய்திப்பிரிவு

சந்தவாசல் அருகே இரு சக்கர வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 298 கிலோ செம்மரக் கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த பள்ளக் கொல்லை அருகே உள்ள ஆனைக்கல் பகுதியில் வனத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக 4 இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களிடம் 298 கிலோ செம்மரக் கட்டைகள் மற்றும் மரம் வெட்ட பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் ஆகியவை இருந்தன.

இதையடுத்து இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்தவர் களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், இரும்புலி கிராமத்தைச் சேர்ந்த தஞ்சி(42), கொளத்தூர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை(28), கீழ் சாரணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி(26), வேட கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்த கனகசபை(33) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, "ஆந்திர மாநிலத்தில் இருந்து செம்மர கட்டைகளை கடத்தி வந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வியாபாரிகள் மூலம் விற்பனை செய்ய இருந்ததாக தெரிய வருகிறது” என்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் 4 பேரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 298 கிலோ செம்மரக் கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்