வாக்குகள் எண்ணும் - அரசு அலுவலர்களுக்கு பயிற்சி :

By செய்திப்பிரிவு

வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் வரும் 15-ம் தேதி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெறவுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3 மையங்களில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். வேலூர் மற்றும் அணைக்கட்டு தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்திலும், காட்பாடி தொகுதிக்கு சட்டக்கல்லூரியிலும், குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி மையத்திலும் நடைபெறவுள்ளன.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்துக்கும் 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அவ்வப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு தொகுதிக்கான மையங்களில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு மேற் பார்வையாளர், ஒரு நுண் பார்வை யாளர், உதவியாளர் என 3 பேர் வீதம் சுமார் 50 பேர் பணியில் ஈடுபடவுள்ளனர்.

மொத்தமுள்ள 5 தொகுதி களுக்கும் சேர்த்து தேர்வு செய்யப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களுக்கு விஐடி பல்கலைக்கழக வளாகத் தில் வரும் 15-ம் தேதி பயிற்சி அளிக்கவுள்ளனர். இதில், வாக்கு இயந்திரங்களை பிரித்து எவ்வாறு வாக்குகள் எண்ணுவது, முகவர்களிடம் எவ்வாறு வாக்குகளின் விவரங்களை காண்பித்து பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து பயிற்சி அளிக்கவுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்