விழுப்புரம் நீதிமன்றத்தில் கனி மொழி மீதான அவதூறு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி அதிமுக ஆட்சியை கண்டித்து திமுக சார்பில் திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி பங்கேற்றார். அப்போது, அவர் தமிழக அரசையும், முதல்வர் பழனி சாமியையும் அவதூறாக பேசியதாக அரசு வழக்கறிஞர் சீனிவாசன் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி எம்பி ஆஜராகவில்லை.
அவர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி, இவ்வழக்கில் கனிமொழி எம்பி ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளதாக கூறி, அதற்கான உத்தரவு நகலை தாக்கல் செய்தார்.
இதையடுத்து நீதிபதி இளவழகன், இவ்வழக்கின் விசாரணையை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago