மீன்பிடித் தடைக்காலத்தில் - 33 ஆயிரம் மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் :

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் மீன்பிடித் தடைக்காலத்தில் 33 ஆயிரம் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

தமிழக கிழக்குக் கடற்கரை பகுதி முழுவதும் (திருவள்ளூர், சென்னை மாவட்டம் தொடங்கி கன்னியாகுமரி வரை)

ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14- வரை 60 நாட்களுக்கு மீன்களின் இனப்பெருக் கத்துக்காக மீன்பிடித் தடைக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சுமார் 1800 விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நங்கூ ரமிடப்படும்.

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் வேலையின்றி தவிப் பதால் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் 33 ஆயிரம் மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். தடைக்காலத்தில் அரசின் உத்தரவை மீறி விசை ப்படகுகள் மீன்பிடிக்கச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மீன்பிடித் தடைகாலத்தில் தூண்டில் மீன்பிடிப்பு, நாட்டு ப்படகு, தெர்மாகோல் மிதவை போன்ற பராம்பரிய மீன்பிடிப்புகள் மட்டும் நடைபெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்