கரோனா அச்சம் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைந்ததால், ஈரோடு மாட்டுச்சந்தையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமையில் கூடி வருகிறது. நேற்றைய சந்தையில், ஈரோடு, கரூர், நாமக்கல், திருவண்ணாமலை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
கரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடாகா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநில வியாபாரிகள் சந்தையில் பங்கேற்கவில்லை. இதனால் மாடுகள் விற்பனை பாதிக்கப்பட்டது.
நேற்றைய சந்தையில் 375 பசு மாடுகளும், 225 எருமை மாடுகளும் என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் 80 சதவீத மாடுகள் மட்டும் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago