ஈரோட்டில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு மது விற்பனை :

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஏப்ரல் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. தேர்தல் விடுமுறைக்குப் பின்னர் நேற்று முன்தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை 214 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.ஒவ்வொரு நாளும் இங்கு சராசரியாக ரூ.4 கோடி வரை மது விற்பனையாகி வருகிறது. பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகும்.

இந்நிலையில், தேர்தலையொட்டி 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், கடந்த 3-ம் தேதியன்று மட்டும் ரூ.12 கோடிக்கு மதுபானம் விற்பனையானது.

மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின்னர் நேற்று முன் தினம் மதுபானக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் ரூ.5 கோடியே 99 லட்சத்து 48 ஆயிரத்து 950-க்கு மது விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்