திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள ‘சீல்' வைக்கப்பட்ட அறை கள் முன்பு ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு செய்தார்.
தி.மலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரகள் மற்றும் வாக்கினை யாருக்கு செலுத்தினோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந் திரங்களுக்கு ‘சீல்' வைக்கப் பட்டன.
இதையடுத்து, திருவண்ணா மலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம் மற்றும் செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிகளில், வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரங்களை, வாக்குகள் எண்ணும் இடமான திருவண்ணா மலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், ஆரணி, செய்யாறு, வந்தவாசி மற்றும் போளூர் தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரங்களை, வாக்குகள் எண்ணும் இடமான ஆரணி அடுத்த தச்சூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. தனித்தனி அறைகளில் தொகுதி வாரியாக மின்னணு இயந்திரங்கள் வைக்கப் பட்டு ‘சீல்' வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருவண்ணா மலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், பணியில் இருந்த துணை ராணுவப் படையினரிடம், பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர், வாக்கு எண்ணும் இடத்தை பார்வையிட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உடனிருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago