திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் என 4 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. திருப்பத்தூர் தொகுதியில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 544 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில், 92,256 ஆண்களும், 91,350 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 4 பேர் என 1 லட்சத்து 83 ஆயிரத்து 610 பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் திருப்பத்தூர் தொகுதியில் சராசரியாக 76.97 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
ஜோலார்பேட்டை தொகுதியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 413 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 94,474 ஆண்களும், 99,393 பெண்களும், மூன்றாம் பாலினத் தவர் 2 பேர் என மொத்தம் 1 லட்சத்து 93 ஆயிரத்து 869 பேர் வாக்களித்துள்ளனர்.
இதன் மூலம் இத்தொகுதியில் சராசரியாக 80.98 சதவீதம் வாக்குப்பதிவு நடை பெற்றுள்ளது. வாணியம்பாடி தொகுதியில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 357 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 93,550 ஆண்களும், 94,839 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 10 பேர் என மொத்தம் 1 லட்சத்து 88 ஆயிரத்து 399 பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் வாணியம்பாடி தொகுதியில் சராசரியாக 75.55 சதவீதம் வாக்குப்பதிவு நடை பெற்றுள்ளது.
ஆம்பூர் தொகுதியில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 993 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 88,477 ஆண்களும், 87,657 பெண்கள், 11 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1 லட்சத்து 76 ஆயிரத்து 145 பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் ஆம்பூர் தொகுதியில் சராசரியாக 74.01 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ஆக மொத்தம் 4 தொகுதிகளிலும் 9 லட்சத்து 65 ஆயிரத்து 307 வாக்காளர்களில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 757 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 73 ஆயிரத்து 239 பெண் வாக்காளர்களும், 27 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 7 லட்சத்து 42 ஆயிரத்து 23 பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் சராசரியாக 76.87 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தை பொருத்தவரை வாணியம்பாடி, ஜோலார்பேட்டை தொகுதிகளில் மட்டும் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகமாக வாக்களித் துள்ளனர்.
அதேபோல், திருப்பத்தூர், ஆம்பூர் தொகுதிகளில் பெண் களைக் காட்டிலும் ஆண் வாக்காளர்களே அதிகமாக வாக்களித்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago