தி.மலை மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட - ரூ.1.61 கோடி ரொக்கம் திரும்ப ஒப்படைப்பு : ரூ.15.53 லட்சம் மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் விடுவிப்பு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த 164 பேரிடம் ரூ.1,61,03,903 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், 15.53 லட்சம் மதிப்பிலான தங்கள் உள்ளிட்ட பொருட்கள் விடுவிக்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட் டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. பணம் வழங்கலை தடுக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி பறக்கும் படைகள் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு அமைத்து சோதனை நடத்தப் பட்டது. அதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம், தங்க நகைகள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

செங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் 10 பேரிடம் இருந்துரூ.8,75,828 ரொக்கம் பறிமுதல்செய்யப்பட்டது. இதில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்த 4 பேரிடம் ரூ.3,99,418 ரொக்கம் திருப்பி ஒப்படைத்தனர். தி.மலை சட்டப் பேரவைத் தொகுதியில் 41 பேரிடம்ரூ.43,10,550 ரொக்கமும், 2 பேரிடம் இருந்து ரூ.2,49,032 மதிப்பில் புடவை மற்றும் அலுமினிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்த 38 பேரிடம் ரூ.40,09,550 ரொக்கமும், புடவை, அலுமினிய பொருட்கள் ஆகியவை முழுமையாக ஒப் படைக்கப்பட்டன.

கீழ்பென்னாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 39 பேரிடம் இருந்து ரூ.31,51,201 ரொக்கமும், 5 பேரிடம் இருந்து ரூ.14,23,300 மதிப்பில் 318 கிராம் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்த 35 பேரிடம் ரூ.29,16,891 ரொக்கமும், 2 பேரிடம் ரூ.12,94,411 மதிப்பிலான தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் 12 பேரிடம் இருந்து ரூ.11,48,854 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்த 7 பேரிடம் ரூ.8,47,354 ரொக்கம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

போளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 24 பேரிடம் இருந்து ரூ.21,65,380 ரொக்கமும், 3 பேரிடம் இருந்து ரூ.23,400 மதிப்பில் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்த 15 பேரிடம் ரூ.12,24,830 ரொக்கம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் 15 பேரிடம் இருந்து ரூ.41,82,140 ரொக்கமும், 4 பேரிடம் இருந்து ரூ.15,720 மதிப்பிலான காமாட்சி அம்மன் விளக்கு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், உரிய ஆவணங்களை ஒப்படைத்த 7 பேரிடம் ரூ.10,32,450 ரொக்கம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் 15 பேரிடம் இருந்து ரூ.16,30,120 ரொக்கமும், ஒருவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பில் பட்டு நூல், ஜரிகை நூல் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், உரிய ஆவணங்களை ஒப்படைத்த 7 பேரிடம் ரூ.9,66,670 ரொக்கமும், பட்டு நூல், ஜரிகை நூல் ஆகியவை ஒப்படைக்கப்பட்டன. வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 62 பேரிடம் இருந்து ரூ.54,57,520 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், உரிய ஆவணங்களை ஒப்படைத்த 51 பேரிடம் ரூ.47,06,740 ரொக்கம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

திருவண்ணாமலை மாவட் டத்தில் மொத்தம் 218 பேரிடம் இருந்து ரூ.2,29,21,593 ரொக்கமும், 15 பேரிடம் இருந்து ரூ.17,21,452 மதிப்பில் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த 164 பேரிடம் ரூ.1,61,03,903 ரொக்கமும், 5 பேரிடம் இருந்து ரூ.15,53,443 மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.68,17,690 ரொக்கமும், ரூ.1,52,289 மதிப்பிலான பொருட்கள் மீதான விசாரணை தொடர்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்