வேலூர் மாநகர பேருந்து நிறுத்தங்களில் - குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி அமைப்பு :

By செய்திப்பிரிவு

வேலூர் மாநகர பேருந்து நிறுத்தங் களில் பொதுமக்களின் வசதிக்காக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலூரில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 110 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்தது. அனல் காற்றுடன் வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும், இளநீர், தர்பூசணி மற்றும் குளிர்பானங்கள் விற்பனையும் களை கட்டியுள்ளது.

வெயில் காலம் என்பதால் அதிகளவில் தண்ணீர் அருந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், வேலூர் பேருந்து நிலையங்களில் குடிநீர் வசதி எதுவும் இல்லை. அதிக அளவில் பயணிகள் வரக்கூடிய புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையங்களிலும் குடிநீர் வசதி இல்லாத நிலை இருந்தது. மேலும், தேர்தல் காலமாக இருந்ததால் குடிநீர் வசதிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில், வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவின்பேரில் அதிக பயணி கள் வந்து செல்லக்கூடிய பேருந்து நிறுத்தங்களில் குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாநகரில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் சின்டெக்ஸ் தொட்டிகள் வைக்கப்பட்டு காலை மற்றும் மாலை நேரங்களில் குடிநீர் நிரப்பி வருகின்றனர்.

இந்த சின்டெக்ஸ் குடிநீரை பொதுமக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் பருகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்