கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் - தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதம் : மாநகரை விட கிராமங்களில் அதிக வாக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் பதிவான வாக்கு சதவீதம்விவரத்தை தேர்தல் ஆணையம்அதிகாரப்பூர்வமாக அறிவித்துள் ளது. கோவை மாநகரில் குறைந்த அளவிலும், கிராமப்புறங்களில் அதிகளவிலும் வாக்குப்பதிவாகி உள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 10சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 68.32 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. மாநகர பகுதிகளைக் கொண்டுள்ள கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளை யம் தொகுதிகளில் 70 சதவீதத்துக் கும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன.

ஆனால், அதிக கிராமப்பகுதிகளைக் கொண்டுள்ள மேட் டுப்பாளையம், தொண்டாமுத்தூர், சூலூர், கிணத்துக்கடவு தொகுதி களில் 70 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன. 10 தொகுதிகளில் மொத்தமுள்ள 30,82,028 வாக்காளர்களில், ஆண்கள் 10,49,917 பேர், பெண்கள் 10,55,653 பேர், மூன்றாம் பாலினத்தவர் 103 பேர் என மொத்தம் 21,05,673 பேர் வாக்களித்துள்ளனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் பொள்ளாச்சி தொகுதியில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் மொத்தம் 69.67 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 23,59,804 வாக்காளர்களில், ஆண்கள் 8,26,798 பேர், பெண்கள் 8,17,255 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 16,44,085 பேர் வாக்களித்தனர். 7 லட்சத்து 15,719 பேர் வாக்களிக்கவில்லை. 2016 சட்டப்பேரவைத் தேர்தலை போலவே இம்முறையும் காங்கயம் தொகுதியில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகமாக உள்ளது.

உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 69.86 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. மூன்று தொகுதிகளில் மொத்தமுள்ள 5,86,950 வாக்காளர்களில், 4,10,054 பேர் வாக்களித்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் உள்ள 8 திருநங்கைகளில் கூடலூரில் மட்டும் ஒருவர் வாக்களித்துள்ளார். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலை விட இம்முறை வாக்குப் பதிவு சதவீதம் குறைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்