ஈரோட்டில் 45 ஆயிரம் பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி : சுகாதாரத்துறையினர் தகவல்

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 45 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறையினர் தெரிவித் துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் முதல்கட்டமாக 20 ஆயிரம் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் முதல் தேதியில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்ட இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 24 அரசு மையங்கள் மற்றும் 42 தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி முதல், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனை வருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, தடுப்பூசி போட விருப்பம் உள்ள பொதுமக்கள், அந்தந்த மையத்துக்கு நேரடியாகச் சென்று, தங்களது ஏதாவதுஒரு அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி போட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் 45 ஆயிரத்து 335 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நேற்று முன் தினம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை கரோனா பாதிப்புக்குள்ளானவர்கள், கவச உடை அணிந்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கரோனா பாதிப்புள்ள, 56 பேர் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து, முன்பதிவு செய்து இருந்தனர். இவர்களில், 49 பேர் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி வாக்களித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்