விழுப்புரம் அருகே திருமணம் செய்வதாக இளம் பெண்ணை ஏமாற்றியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிடம், குத்தாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (28) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகியுள்ளார். இதனால் அப்பெண் தாய்மை அடைந்துள்ளார். அதன் பிறகு திருமணத்திற்கு ராஜ்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனை அப்பெண் ராஜ்குமாரின் தந்தை ஜெயபால், தாயார் யசோதை, சகோதரர் சதீஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு அவர்கள் அப்பெண்ணை திட்டி அவமானப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அப்பெண் 2015-ம் ஆண்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.
இவ்வழக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று நீதிபதி சாந்தி இவ்வழக்கில் ராஜ்குமாருக்கு 7 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் ராஜ்குமாரின் தந்தை ஜெயபால், தாயார் யசோதை, சகோதரர் சதீஷ்குமார் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago