ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோயில் குண்டம்மற்றும் தேர்த்திருவிழாவை யொட்டி, நேற்று இரவு நடந்த கம்பம் நடும் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஈரோட்டின் காவல் தெய்வமாக விளங்கும் ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நேற்று முன் தினம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு, மூன்று கோயில்களில் கம்பங்கள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
பெரியமாரியம்மன் கோயிலில்எழுந்தருளியுள்ள, பட்டாளம் மனுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நேற்று இரவு நடந்தன. இதனைத் தொடர்ந்து, காரை வாய்க்கால் மாரியம்மன் கோயிலில், மஞ்சள்பூசி, காப்பு கட்டி, பூஜை செய்யப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்த, மூன்று கம்பங்களை, கோயில் பூசாரிகள், மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பெரியார் வீதி, கச்சேரி வீதி, பன்னீர்செல்வம் பூங்கா வழியாக ஊர்வலம் வந்த நிலையில், முதல் கம்பம் பெரியமாரியம்மன் கோயிலிலும், இரண்டாவது கம்பம் சின்ன மாரியம்மன் கோயிலிலும், மூன்றாவது கம்பம், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலிலும் நடப்பட்டது. இன்று முதல் பக்தர்கள் கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி வழிபடவுள்ளனர்.
இந்நிலையில், திருவிழாவை யொட்டி இன்று (8-ம் தேதி) காலை 6 மணிக்கு காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலில் குண்டம் இறங்குதலும், 9 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago