தென்காசி மாவட்டத்தில் - 72.58 சதவீதம் வாக்குப்பதிவு :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் (தனி), வாசுதேவ நல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 72.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தொகுதிவாரியாக வாக்குப் பதிவு விவரம்:

சங்கரன்கோவில் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் -2,53,310 , பதிவான வாக்குகள்- 1,81,051, வாக்குப்பதிவு சதவீதம்- 71.47.

வாசுதேவநல்லூர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள்- 2,41,109, பதிவான வாக்குகள்- 1,72,838, வாக்குப்பதிவு சதவீதம்- 71.87

கடையநல்லூர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள்- 2,89,940. பதிவான வாக்குகள்- 2,30,141, வாக்குப்பதிவு சதவீதம் - 70.06

தென்காசி தொகுதியில் மொத்த வாக்காளர்கள்- 2,92,168, பதிவான வாக்குகள்- 2,11,157, வாக்குப்பதிவு சதவீதம் - 72.33

ஆலங்குளம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள்- 2,60,429, பதிவான வாக்குகள்- 2,01,569, வாக்குப்பதிவு சதவீதம் - 77.40

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் 75.56 சதவீதம், வாசுதேவநல்லூர் தொகுதியில் 73.16 சதவீதம், கடையநல்லூர் தொகுதியில் 70.89 சதவீதம், தென்காசி தொகுதியில் 76.89 சதவீதம், ஆலங்குளம் தொகுதியில் 78.59 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. அப்போது திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்படாமல் இருந்தது. தற்போது தென்காசி மாவட்டத்தில் 13,36,956 வாக்காளர் கள் உள்ளனர். இவர்களில் 9,69,756 பேர் வாக்களித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்