கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - 16 விவிபாட் இயந்திரங்கள் பழுது :

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய4 தொகுதிகளில்1,569 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 2,357 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1,569 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 1,569 விவிபாட் இயந்திரங்களும் பொருத்தப்பட்டு வாக்காளர்கள் வாக்களித்தனர். உளுந்தூர்பேட்டை தொகுதியில் ஒன்று, சங்கராபுரத்தில் 5, கள்ளக்குறிச்சியில் 3 என மொத்தம் 9 வாக்குப் பதிவு இயந்திரங்களும் பழுதானது.

இதே போல் உளுந்தூர்பேட்டை தொகுதியில் ஒன்று, சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 2-ம் என மொத்தம் 5 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், உளுந்தூர்பேட்டை மற்றும் சங்கராபுரம் தொகுதியில் தலா 5, ரிஷிவந்தியத்தில் 2, கள்ளக்குறிச்சியில் 4 என மொத்தம் 16 விவிபாட் இயந்திரங்களும் வாக்குப் பதிவின் போதுபழுதானது. இதையடுத்து அங்கிருந்த அலுவலர்கள் பழுதான இயந்திரங்களை மாற்றி விட்டு, மாற்று இயந்திரங்களை பொருத்தினர். இதனால் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு அரைமணி நேரம் தாமதமானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்