பாலருவி விரைவு ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு :

By செய்திப்பிரிவு

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி - பாலக்காடு - திருநெல்வேலி (எண் 06791/06792) பாலருவி சிறப்பு ரயிலில் தற்போது8 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் மற்றும் 2 லக்கேஜ் பெட்டிகள் எனமொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

பயணிகள் வசதிக்காக இந்தரயில்களில் மேலும் 2 இரண்டாவது வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன. இந்தக் கூடுதல் பெட்டிகள்பாலருவி சிறப்பு ரயிலில் திருநெல்வேலியிலிருந்து ஏப்ரல்8-ம் தேதி முதலும், பாலக்காட்டில் இருந்து ஏப்ரல் 9 -ம் தேதியிலிருந்தும் இணைக்கப்பட இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘‘பாலருவி விரைவு ரயிலில்கூடுதலாக 2 பெட்டிகள் இணைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த ரயிலுக்கு இவ்வழித்தடத்தில் உள்ள முக்கிய கிராசிங் ரயில் நிலையங்களான கடையம் மற்றும் பாவூர்சத்திரத்துக்கு ஒரு மார்க்கத்திலும், செங்கோட்டைக்கு இரு மார்க்கங்களிலும் நிறுத்தங் கள் நீக்கப்பட்டுள்ளன.

இரு தொகுதி எம்பிக்களும் ரயில்வே வாரிய தலைவரிடமும், தென்னக ரயில்வே பொது மேலாளரிடமும் நேரில் கோரிக்கை வைத்தும் ரயில்வே நிர்வாகம் செவிசாய்ப்பதாக தெரியவில்லை. ஏறத்தாழ 2 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் நீக்கப்பட்ட ரயில் நிறுத்தங்களை உடனே வழங்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு கோரிக்கை வைக்கிறோம்.

மேலும் 117 ஆண்டு வரலாறு கொண்ட இந்த வழித்தடத்தில் இந்த ஒரு விரைவு ரயில் மட்டுமே இயங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக அம்பை, கடையம், பாவூர்சத்திரம் வழித்தட மக்களின் தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் விரைவு ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது’’ என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்