92 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் 92 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று கண்டறியப்பட்டுள்ளது.

வட்டாரம் வாரியாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை விவரம்: திருநெல்வேலி மாநகரம்- 61, மானூர்,வள்ளியூர், களக்காடு- தலா 1, நாங்குநேரி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம்- தலா 4, பாளையங்கோட்டை- 12, பாப்பாக்குடி, ராதாபுரம்- தலா 2.

நாகர்கோவில்

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோர் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வேகமாக பரவிவருகிறது. இதனால் நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதிகளில் பேருந்துநிலையங்கள், மக்கள் அதிகமானோர் கூடும் பகுதி, காய்கறிசந்தை, மீன் சந்தை மற்றும்வணிக நிறுவனங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாகர்கோவிலில் சமூகஇடைவெளியை கடைபிடிக்காத கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். கிருமி நாசினி தெளிப்பு, நோய் தொற்றை தடுக்கும் பூச்சி விரட்டி புகை அடிக்கும் பணியில் உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த இரு நாட்களில் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 61 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணியாதோருக்கு நகராட்சி, மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்