வேலூர் ரங்காபுரத்தில் திமுக வுக்கு ஆதரவாக அக்கட்சி பிரமுகர் ஒருவர் வாக்கு சேகரித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
வேலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ரங்காபுரம் அரசு தொடக்கப் பள்ளி வளா கத்தில் 7 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, நேற்று காலை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது, வரிசையில் நின்றிருந்த வாக்காளர்களிடம் திமுக பிரமுகர் ஒருவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் அவரை வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்கு செல்லுமாறு கூறினர். ஆனால், அதை கேட்காமல் வாக்கு சேகரித்த திமுக பிரமுகர் காவல் துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன் ‘அடுத்து எங்க ஆட்சிதான்’ என்று கூறி மிரட்டியதுடன் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டார்.
அப்போது, அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் காவலர்கள் விரைந்து சென்று அந்த நபரை அங்கிருந்து விரட்டினர்.
இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago