நெல்லை மாவட்ட தேர்தல் களத்தில் 76 வேட்பாளர்கள் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 5 சட்டப் பேரவை தொகுதிகளில் திருநெல் வேலியில் 14, பாளையங்கோட்டையில் 10, அம்பாசமுத்திரத்தில் 12, நாங்குநேரியில் 15, ராதாபுரத்தில் 25 என மொத்தம் 76 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தொகுதி வாரியாக களத்திலுள்ள வேட்பாளர்கள், அவர்களுக்கான சின்னங்கள் விவரம்:

திருநெல்வேலி

க. கலாநிதி ( பகுஜன் சமாஜ்- யானை), நயினார்நாகேந்திரன்- பாஜக (தாமரை), ஏஎல்எஸ் லட்சுமணன்- திமுக (உதயசூரியன், சத்யா - நாம் தமிழர் கட்சி ( விவசாயி), எம். சுந்தர்ராஜ் - மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (மூன்று நட்சத்திர கொடி), ப. மகேஷ் கண்ணன் - அமமுக (குக்கர்), சுயேட்சைகள் ப. இசக்கிமுத்து (இஸ்திரி பெட்டி), ம. சங்கரசுப்பிரமணியன் (வைரம்), ரா. சங்கரநாராயணன் ( ஊதுகுழல்), மூ. சிவக்குமார் (தொலைக்காட்சி பெட்டி), ரா. முருகன் (புல்லாங்குழல்), வே. முருகன் (பரிசுப் பெட்டகம்), சி.எம். ராகவன் (தொப்பி), தர் ராஜன் ( ஆட்டோ ரிக்சா).

ராதாபுரம்

மு.அப்பாவு- திமுக (உதயசூரியன்), இ. இசக்கியம்மாள்- பகுஜன் சமாஜ் கட்சி (யானை), ஐ.எஸ். இன்பதுரை அதிமுக (இரட்டை இலை), கா. ஜெயபாலன் - தேமுதிக (முரசு), காட்ப்ரே நோபுள் - (குழல் விளக்கு), ம.சந்திரன்- (சிறு உரலும் உலக்கையும்), ஜெ. சேசு ராசேந்திரன் - (டிராக்டர் இயக்கும் உழவன்), இரா. ஜேசுதாசன்- நாம் தமிழர் கட்சி (கரும்பு விவசாயி), எம். அந்தோணி ரோசாரி (பரிசுப் பெட்டகம்), அபினந்த் ராம் ( ஒலிவாங்கி), து. அருண்ராஜ் (தலைகவசம்), எஸ். கட்டேரி பெருமாள் ( தீப்பெட்டி), ந. கண்ணன் (மோதிரம்), அ. குமார் (கால்பந்து), ம. சரஸ்வதன் (கிரிக்கெட் மட்டை), ர. சுடலைமணி (தொலைபேசி), கா. சுப்புராஜ் (விளக்கேற்றி), சேக் செய்யது அலி (கத்தரிக்கோல்), த. சேர்மத்துரை ( காலணி), கோ. தேவபிரான் (புல்லாங்குழல்), எஸ். மணிகண்டன் (மடிக்கணினி), டி. முத்துசெல்வி (பேனா முனை), டி. ரெத்தினபாண்டி (தட்டச்சு இயந்திரம்), மு. விஜயகுமார் (தொப்பி), த. வீனஸ் வீர அரசு (உணவுக் கலன்).

நாங்குநேரி

கணேசராஜா - அதிமுக (இரட்டை இலை), சுப்புலெட்சுமி- பகுஜன் சமாஜ் (யானை), மனோகரன்- காங்கிரஸ் (கை), கந்தன் (பானை), சண்முகசுந்தரம் - (டிராக்டர் இயக்கும் உழவன்), பரமசிவ ஐயப்பன்- அமமுக (குக்கர்), பிரபாகரன் (சிறுஉரல் உலக்கை), வீரபாண்டி - நாம் தமிழர் கட்சி (விவசாயி), அசோக்குமார்- புதிய தமிழகம் (தொலைக்காட்சி பெட்டி), கந்தசாமி (கணினி), கதிரவன்- (வைரம்), ஞானபாலாஜி (தென்னந்தோப்பு), முத்துதுரை (கிரிக்கெட் மட்டை), முத்துராஜ் (பரிசுப் பெட்டகம்), லெனின் (பாய்மர படகு).

அம்பாசமுத்திரம்

இரா. ஆவுடையப்பன் - திமுக (உதயசூரியன்), இ. இசக்கி சுப்பையா - அதிமுக (இரட்டை இலை), எம். மணிமாறன் - பகுஜன் சமாஜ் (யானை), செங்குளம் கணேசன்- மக்கள் நீதி மய்யம் (டார்ச்லைட்), மோ. செண்பகவள்ளி - நாம் தமிழர் கட்சி (விவசாயி), செ. ராணிரஞ்சிதம் - அமமுக (குக்கர்), சே. லெட்சுமணன் (சிறு உரல் உலக்கை), அப்துல் மஜித் (பிஸ்கட்), அருணாசலம் (பைனாகுலர்), சு. கணேசன் (வைரம்), மு. கவாஸ்கர் (பரிசு பெட்டகம்), ராஜேஷ் தர்மசிங் பாண்டியன் (கிரிக்கெட் மட்டை).

பாளையங்கோட்டை

மு. அப்துல் வகாப் - திமுக (உதயசூரியன்), ஜி. ஜெரால்டு - அதிமுக (இரட்டை இலை), பாத்திமா - நாம் தமிழர் கட்சி (விவசாயி), டி. பிரேம்நாத் - மக்கள் நீதி மய்யம் (டார்ச் லைட்), முகம்மது முபாரக்- எஸ்டிபிஐ (குக்கர்), எஸ். ராஜா (சிறு உரல் உலக்கை), எஸ். வீரசுப்பிரமணியன் (குழல் விளக்கு), கு. சடகோபன் (வைரம்), மு. லியோ இன்பன்ட்ராஜ் (ஆட்டோ ரிக்சா), ஜான் சாமுவேல் ஜேசுபாதம் (மோதிரம்).

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்