ஈரோட்டில் இறுதிகட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்த 128 வேட்பாளர்கள் : தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வெளியேற உத்தரவு

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மாவட்டம் முழுவதும் 128 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிநாளான நேற்று மாலை ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம், சூரம்பட்டிவலசு மாரியம்மன் கோயில் அருகே தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சு.முத்துசாமி மேட்டுக்கடையில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் எம்.யுவராஜா, சூரம்பட்டி நால்ரோடு பகுதியிலும், காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வீரப்பன் சத்திரத்திலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிநாளில், பிரதான கட்சியின் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர் களுடன் வாகனப்பேரணி நடத்துவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வாகனப்பேரணிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நேர கட்டுப்பாட்டை மீறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்தி ருந்தனர். மேலும், பிரச்சாரம் நிறைவடைந்த பின்னர் நேற்று மாலை 7 மணிக்கு பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளிநபர்கள் வெளி யேறவும் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்