கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.82 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் கிரண்குராலா கூறியது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 24 மணி நேரமும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் விநியோகிப்பது, இதர தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, உளுந்தூர்பேட்டை தொகுதியில் ரூ.18,15,920, ரிஷிவந்தியம் தொகுதியில் ரூ.33,32,790, சங்கராபுரம் தொகு தியில் ரூ.17,11,590 , கள்ளக்குறிச்சி தொகுதியில் ரூ.13,40,500 எனமொத்தம் ரூ.82,00,800 பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. இதில் உரியஆவணங்களை சமர்ப்பித்தவர் களிடம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் ரூ.2,81,790 மற்றும் சங்க ராபுரம் தொகுதியில் ரூ.7,25,350 விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், உளுந்தூர்பேட்டை தொகுதியில் 210 கொடிகள், 95 டி-ஷர்ட்டுகள் மற்றும் ரூ. 1.77 லட்சம் மதிப்பிலான 30 மெட்ரிக் டன் யூரியா மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago