ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக பலவீனமாகிவிட்டது: சு.திருநாவுக்கரசர் :

By செய்திப்பிரிவு

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பலவீனமாகி விட்டது என திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர் தெரிவித் தார்.

புதுக்கோட்டை தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட் பாளர் வி.முத்துராஜாவை ஆதரித்து புதுக்கோட்டையில் நேற்று மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது செய்தியாளர்களி டம் சு.திருநாவுக்கரசர் கூறி யது: பாஜகவோடு கூட்டணி வைத்ததால் நஷ்டம்தான் என அதிமுகவில் சாதாரண தொண் டருக்குக் கூட தெரிந்துள்ளது. இது முதல்வர் பழனிசாமிக்கு தெரியாமல் இல்லை. அதிமுக வினரின் மடியில் கனம் உள் ளது.

தேர்தலை நோக்கி செல்லும் வழியில் பயம் உள்ளது. பாஜகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என நிர்பந்தமும், கட்டாயமும் அவர் களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பலவீனமாகி விட்டது. அதிலும், தற்போது இரட்டைத் தலைமையுடன் அக்கட்சி செயல்படுவதும், சசி கலா, தினகரன் தலைமையில் மற்றொரு அணி செயல்படு வதும் அதிமுகவுக்கு மேலும் பலவீனத்தை ஏற்படுத்தி உள் ளது.

அதிமுக அரசானது பாஜக வின் கீழ் கொத்தடிமை அர சாகவும், ஊழல் அரசாகவுமே இருந்து காலத்தைக் கழித் திருப்பது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி உள் ளது. திமுக கூட்டணியோடு போட்டியிட அதிமுகவே திண்டாடி வரும் நிலையில், முதல்வர் வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ள தினகரன், சீமான், கமல்ஹாசன் போன்றோர்களால் என்ன செய்யமுடியும்? என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்