பாபநாசம், குற்றாலம் கோயிலில் - இன்று சித்திரை விஷு திருவிழா கொடியேற்றம் :

By செய்திப்பிரிவு

குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் சமேத குழல்வாய்மொழியம்மன் கோயிலில் சித்திரை விஷு திருவிழா இன்று கொடி யேற்றத்துடன் தொடங்கு கிறது. காலை 5.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெறு கிறது. இதைத் தொடர்ந்து, இலஞ்சி குமாரர் வருகை, மாலையில் வெள்ளிச் சப்பரத் தில் வீதியுலா, சுவாமி, அம்மன் மாலையில் சிம்மாசனத்தில் வீதியுலா நடைபெறுகிறது.

வருகிற 8-ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 9-ம் தேதி காலையில் தேரோட்டம், 11-ம் தேதி காலை 8.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை நடை பெறுகிறது. வரும் 12-ம் தேதி சித்திரசபையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை சார்த்தி தாண்டவ தீபாராதனை, 14-ம் தேதி சித்திரை விஷு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இலஞ்சி குமாரர், சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங் களில் வீதியுலா நடை பெறுகிறது.

இதேபோல், பாபநாசத்தில் உள்ள உலகாம்பிகை உடனுறை பாபநாசநாத சுவாமி கோயிலில் சித்திரை விஷு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. வரும் 13-ம் தேதி காலை 11 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 14-ம் தேதி சித்திரை விஷு நாளில் காலை 8 மணிக்கு பூப்பல்லக்கில் சுவாமி வீதியுலா, பகல் 1 மணிக்கு தீர்த்தவாரி, இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 15-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமணக்கோலத்தில் அகத்திய முனிவருக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்