தேர்தல் பிரச்சாரத்துக்காக வேலூர் மாவட்டத்துக்கு வந்த வெளி மாவட்டத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தர விட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நாளை (6-ம் தேதி) நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 7 மணியுடன் நிறைவுபெற்றது.
நாளை வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் வேட்பாளர்கள் யாரும் எந்த வழிகளிலும் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது. 5 சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தலுக்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட வெளியாட்கள் உடனடியாக மாவட்டத்தை விட்டு வெளி யேற வேண்டும்.
திருமண மண்டம், விடுதிகள், குடியிருப்புகள், சமுதாயக் கூடங்களில் தங்கியிருந்த அனைவரும் அந்தந்த தொகுதியை விட்டு வெளியே செல்ல வேண்டும். வீடு, வீடாக சென்று பூத் சிலீப் வழங்குவது, வாக்காளர்களுக்கு பணம் வழங்குதல் போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது.
தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக ஒலி, ஒளி காட்சி, வானொலி, சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யக்கூடாது. அதேபோல, தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக எந்தவிதமான குறுஞ்செய்தி, வாட்ஸ்- அப் செய்தி ஆகியவற்றை வாக்காளர்களுக்கு அனுப்பக் கூடாது. பிரச்சாரத்துக்காக உரிமம் பெற்ற வாகனங்களை பயன்படுத்தக் கூடாது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மீறினால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
மேலும், தேர்தலில் நாளை வாக்களிக்க வரும் வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையோ அல்லது அரசின் அங்கீகாரம் பெற்ற 11 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
வேலூர் மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் ஊழியர் களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை ஏப்ரல் 6-ம் தேதி (நாளை) வழங்கப்பட்டுள்ளது.
எனவே, விதிமீறி யாராவது தொழிற்சாலையை ஏப்ரல் 6-ம் தேதி திறப்பது தெரியவந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்ட மணில்லா தொலைபேசி எண்: 1800-4255-668 என்ற வாட்ப்-அப் எண்ணிலும் 94987-47537 என்ற தொலை பேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்’’ என தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago