திருவலம் மற்றும் கே.வி.குப்பம் அருகே ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை தேர்தல் பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கரசமங்கலம் பகுதியில் சில்லறை முறையில் மதுபானபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, கே.வி.குப்பம் காவல் துறையினர் சேனூர் - கரசமங்கலம் கூட்டுச்சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (38) என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்தார்.
காவல் துறையினரை கண் டதும் ரஞ்சித் தான் ஓட்டி வந்த வாகனத்தை அங்கேயே விட்டு தப்பியோடினார். இதை யடுத்து, அந்த வாகனத்தில் இருந்த மூட்டையை பிரித்து சோதனையிட்டபோது, அதில் ரூ.22 ஆயிரம் மதிப்பிலான 180 மதுபான பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.
அதேபோல, திருவலம்- சேர்க்காடு சின்னதெருவில் திருவலம் காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, அதேபகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் (49) என்பவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சில்லறை விலையில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்த ரூ.28 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து சந்திரசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago