பறக்கும்படை சோதனையில் ரூ.12 லட்சம் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

பாளையங்கோட்டை அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.12 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டது.

தமிழக சட்டப் பேரவை தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பறக்கும்படை வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையிலான அதிகாரிகள் திருநகர் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் வந்த வாகனத்தை சோதனையிட்டதில் அதில் ரூ.12 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் அத் தொகையை பறிமுதல் செய்து பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பாளையங் கோட்டை பெருமாள்புரம் பகுதியில் உள்ள தனியார் காஸ் கம்பெனியில் இருந்து வங்கிக்கு அந்த பணத்தை கொண்டு சென்றதாக பணத்தை கொண்டு வந்த ஊழியர் மகேஷ் தெரிவித்தார். அதற்கான உரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுச் செல்லுமாறு அவரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்