வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர் களுக்கு மறு வலுவூட்டல் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் உள்ள 1,783 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 8,560 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 5 தொகுதிகளில் அமைக்கப்பட்ட மையங்களில் இரண்டு கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், விருப்பம் தெரிவித்தவர்கள் அந்தந்த பயிற்சி மையங்களிலேயே தபால் வாக்குகள் அளிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர் நிலை-1 உள்ளிட்டோருக்கு மறு வலுவூட்டும் பயிற்சி முகாம் 5 மையங்களில் நேற்று நடை பெற்றது. ஏற்கெனவே நடை பெற்ற பயிற்சி முகாமில் 2,541 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த முகாமில் தபால் வாக்குச்சீட்டு மற்றும் தேர்தல் பணிச்சான்று பெறாத அலுவலர்கள் அனைவரும் (வாக்குச்சாடி அலுவலர் நிலை 2 மற்றும் நிலை 3 உள்பட) தங்கள் தபால் வாக்குச்சீட்டுகளை பெற்று பதிவு செய்தனர்.
அதேபோல், தேர்தல் பணிச்சான்று பெறாத எஞ்சிய நபர்களுக்கு பயிற்சி முகாமில் தேர்தல் பணிச்சான்றுகள் வழங் கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago