வேலூரில் பிராமணர் சங்கத்தின் சார்பில் ‘ப்லவ’ வருட பஞ்சாகம் வெளியிடப்பட்டது.
வேலூர் கிளை பிராமணர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மீனாட்சிசுந்தரம் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மகளிரணி செயலாளர் லலிதா கிருஷ்ணமூர்த்தி வரவேற்றுப் பேசினார். ஆலோசகர்கள் பால சுப்பிரமணியம், கிருஷ்ண மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் சேகர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்துப் விளக்கினார்.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சத்திய மூர்த்தி, ‘ப்லவ’ வருட பஞ்சாங்கத்தை வெளியிட கிளைத் தலைவர் மீனாட்சி சுந்தரம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பிராமணர் சங்க உறுப்பினர்கள் கட்டாயம் தேர்தலில் வாக்களிக்க வேண்டும், பிராமண குழந்தைகளுக்கு கோடைகால ஸ்லோக வகுப்புகள் நடத்துவது, அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க செய்தி தொடர்பாளர் ராஜா நன்றி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago