செஞ்சி கோதண்டராமர் கோயில் மகா கும்பாபிஷேகம் :

By செய்திப்பிரிவு

செஞ்சி கோதண்டராமர் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் 500 ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோயில் உள்ளது. கிபி 1714-ம் ஆண்டு ராஜா தேசிங்கிற்கும், ஆற்காட்டு நவாப்பிற்கும் நடந்த போரின் போது இந்த கோயில் பீரங்கி தாக்குதலினால் சின்னாபின்னமானது. சேதமடைந்து 307 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது கோயிலில் கருவறை, கோபுரம் புதுப்பித்து, கருவறை முன்பு மகா மண்டபமும், புதிதாக அனுமன் சன்னதியும் கட்டப்பட்டுள்ளது. இதன் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி கடந்த மாதம் 31-ம் தேதி மாலை விசேஷ ஆராதனை, சங்கல்பம், யாகசாலை பிரவேசம், வாஸ்து ஹோமம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆவாஹணம், முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

நேற்று முன்தினம் (1- ம் தேதி) காலை புண்யாஹவாசனம், கும்ப ஆராதனம், அக்னி பிரணியம், இரவு ஹோமமும் நடைபெற்றது.

நேற்று காலை 8 மணிக்கு விஸ்வரூபம், விசேஷ ஹோமம், 8.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 9 மணிக்கு கலச புறப்பாடும் நடைபெற்றது. காலை 9.45 மணிக்கு கருவறை விமான கோபுரம், அனுமான் சன்னதி, கோதண்டராமருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு உற்சவர் திருக்கல்யாணமும் நடந்தது. இதில் செஞ்சி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்